< Back
மாநில செய்திகள்
காரை படுக்கையாக்கி விபசார தொழில் நடத்திய பெங்களூரு ஆசாமி கைது
சென்னை
மாநில செய்திகள்

காரை படுக்கையாக்கி விபசார தொழில் நடத்திய பெங்களூரு ஆசாமி கைது

தினத்தந்தி
|
5 Jun 2023 12:18 PM IST

காரை படுக்கையாக்கி விபசார தொழில் நடத்திய பெங்களூரு ஆசாமி கைது செய்யப்பட்டார். ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் நவீன ‘ஸ்வைப்பிங்’ கருவியும் பறிமுதல் செய்யப்பட்டது.

காரில் விபசாரம்

சென்னையை அடுத்த மடிப்பாக்கம், சாஸ்திரிநகர் மெயின் ரோட்டில் நீண்ட நேரம் கார் ஒன்று அங்கேயே நின்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் கார்களை படுக்கை போல உருவாக்கி அதில் விபசார தொழில் செய்வதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் விபசார தடுப்பு போலீசார் அந்த பகுதியை ரகசியமாக கண்காணித்தனர். அங்கே நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த காரை சந்தேகத்தின்பேரில் விபசார தடுப்பு போலீசார் சோதனை போட்டனர். அப்போது காரில் அழகிய இளம்பெண் ஒருவர் இருந்தார். கார் அருகில் ஆசாமி ஒருவரும் நின்றிருந்தார். அந்த சொகுசு கார்தான் உல்லாச படுக்கை அறையாக மாற்றப்பட்டு, அதில் தான் விபசாரம் நடப்பதும் தெரிய வந்தது.

பெங்களூரு ஆசாமி கைது

போலீசார் அந்த விபசார சொகுசு காரை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த வெளிமாநில இளம்பெண் மீட்கப்பட்டார். கார் அருகில் நின்றிருந்தவர் பிரபல விபசார தரகர் பெங்களூரு சால்மன் (வயது 42) ஆவார். அவரும் கைது செய்யப்பட்டார். அவர் வெளிமாநில அழகிகளை கார்களில் அழைத்துச் சென்று, வாடிக்கையாளர் விரும்பும் இடத்தில் விடுவார். வாடிக்கையாளர்கள் காரில் வைத்தே உல்லாசம் அனுபவிக்க விரும்பினால், அதற்கும் தயார் நிலையில் காரை உல்லாச படுக்கை போல மாற்றி கொடுப்பார்.

கைதான சால்மனிடம் இருந்து 10 செல்போன்கள் மற்றும் ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் 'ஸ்வைப்பிங்' கருவியும் பறிமுதல் செய்யப்பட்டது. உல்லாசத்தை முடித்துக் கொண்டு, வாடிக்கையாளர்கள், உல்லாசத்துக்கான தொகையை, 'ஸ்வைப்பிங்' கருவி மூலம் அங்கேயே செலுத்தி விட்டு போகலாம். தரகர் சால்மன் இதுபோன்ற நவீன கார் விபசார யுக்தியை கடைபிடித்து வந்தார்.

மேலும் செய்திகள்