கடலூர்
கீழணையில் முதன்மை தலைமை பொறியாளர் ஆய்வு
|கீழணையில் முதன்மை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் அவ்வப்போது வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழணையில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அணை மற்றும் மதகுகள் பாதுகாப்பாக உள்ளதா என்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், பருவமழையின் போது அணையில் சரியாக கண்காணித்து உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என வலியுறுத்தினார். அப்போது வெள்ளாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் தட்சிணாமூர்த்தி, கொள்ளிடம் வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் காந்தரூபன், வெள்ளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர்கள் எஸ். குமார், வி.ஞானசேகர், ஆர்.சரவணன் மற்றும் உதவி பொறியாளர்கள் வெற்றிவேல், முத்துக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.