< Back
மாநில செய்திகள்
கம்பத்தை சேர்ந்த  கஞ்சா வியாபாரி-மனைவியின் வங்கி கணக்குகள் முடக்கம்
தேனி
மாநில செய்திகள்

கம்பத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி-மனைவியின் வங்கி கணக்குகள் முடக்கம்

தினத்தந்தி
|
16 Aug 2022 10:29 PM IST

கம்பத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி மற்றும் அவரது மனைவியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது

கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவர் கஞ்சா கடத்திய வழக்கில் தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கஞ்சா கடத்தல், விற்பனை தொடர்பாக 6 வழக்குகள் உள்ளன. இதனால், அவர் மற்றும் அவருடைய மனைவி ராஜேஸ்வரி ஆகியோரின் சொத்துகளை முடக்க, போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி முருகன் மற்றும் அவருடைய மனைவியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. அந்த வங்கி கணக்குகளில் ரூ.10 லட்சத்து 3 ஆயிரத்து 160 இருந்தது. அவை முடக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் தரப்பில தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்