புதிய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல் அமைவது தமிழருக்கு கிடைத்த பெருமை - பிரேமலதா விஜயகாந்த்
|புதிய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல் அமைவது தமிழருக்கு கிடைத்த பெருமை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
கனிமவள கொள்ளை அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது. இதுகுறித்து கேட்டால் எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி மாறி குறை சொல்கிறார்கள்.
3 மருத்துவ கல்லுரிகளின் உரிமம் ரத்து செய்து இருக்கிறார்கள். ஸ்டான்லி கல்லூரி உரிமத்தை ரத்து செய்தது தமிழகத்திற்கு ஒரு தலை குனிவு. பள்ளிக்கூட கட்டிடம் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடை ஒரு தெருவுக்கு 10 திறக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு வாழ்த்துக்கள். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாள் இன்று. நல்ல ஒரு விஷயம் நாட்டிற்காக நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக ஜனாதிபதியை அழைத்து இருக்க வேண்டும். அந்த நல்ல நிகழ்வை வரவேற்போம். தமிழகத்தில் இருந்து செங்கோல் அங்கு அமைவது ஒட்டு மொத்த தமிழருக்கு கிடைத்த பெருமை.
இவ்வாறு அவர் கூறினார்.