< Back
மாநில செய்திகள்
மாலை நேர உழவர் சந்தை தொடக்கம்
கரூர்
மாநில செய்திகள்

மாலை நேர உழவர் சந்தை தொடக்கம்

தினத்தந்தி
|
17 Aug 2022 12:43 AM IST

கரூரில் மாலை நேர உழவர் சந்தை தொடங்கப்பட்டது. இதில் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

உழவர் சந்தை

கரூரில் உழவர் சந்தை பழைய பஸ்நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை நேரிடையாக விற்பனை செய்து வருகின்றனர்.

காலை 5 மணி முதல் 10 மணி வரை கரூர் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் வந்து காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி செல்கின்றனர்.

சிறுதானியங்கள்

இந்தநிலையில் மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தையை தேர்ந்தெடுத்து அந்த உழவர் சந்தையில் மாலை நேர உழவர் சந்தை செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த மாலை நேர உழவர் சந்தையில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களான பயறு வகைகள், சிறு தானியங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் கரூரில் மாலை நேர உழவர் சந்தை தொடங்கப்பட்டது.

இதையடுத்து கரூர் உழவர் சந்தையில் கடைகள் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் ஆர்கானிக் பொருட்களான சிறுதானியங்கள், பழ வகைகள், பயறு வகைகளும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான பொடி வகைகள், நாட்டு பால், நாட்டு கோழி முட்டை, வெல்லம், பனங்கற்கண்டு, மரச்செக்கு எண்ணெய் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களும் மாலை நேர உழவர் சந்தைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

மேலும் செய்திகள்