விருதுநகர்
தேனீ வளர்ப்பு கருத்தரங்கு
|தேசிய தேனீ மற்றும் தேனீ இயக்கத்தின்கீழ் தோட்டக்கலை துறை மூலம் நடைபெற்ற தேனீ வளர்ப்பு பற்றிய கருத்தரங்கினை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
விருதுநகர்
தேசிய தேனீ மற்றும் தேனீ இயக்கத்தின்கீழ் தோட்டக்கலை துறை மூலம் நடைபெற்ற தேனீ வளர்ப்பு பற்றிய கருத்தரங்கினை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
கருத்தரங்கு
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய தேனீ மற்றும் தேனீ இயக்கத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை மூலம் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு பற்றிய கருத்தரங்கினை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். பின்னர் கருத்தரங்கில் அவர் பேசியதாவது,
தேனீன் மருத்துவ குணத்தை சித்த மருத்துவம் போன்ற அனைத்து மருத்துவமும் வெளிப்படுத்துகிறது. தேனீன் தேவை என்பது மிக அதிகமாக இருக்கிறது.
சந்தைபடுத்துதல்
தேனீ வளர்ப்பை முறையாகவும் தொடர்ச்சியாகவும் செய்யும்பட்சத்தில் விவசாயிகள் கூடுதல் வருமானத்தை பெற முடியும். மாவட்டத்தின் பல்வேறு விவசாயிகள் தேனீ வளர்ப்பு முறையை சிறப்பாக செய்து வருகின்றனர். அதை சந்தைப்படுத்துவதற்கான முறைகள் அறிந்து கொண்டு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தை படுத்த வேண்டும். தரமான தேனுக்கு தேவைகள் அதிகமாக உள்ளது.
கூடுதல் வருமானம்
இந்த தேனீ வளர்ப்பு என்பது ஒவ்வொரு விவசாயிக்கும் கூடுதல் வருமானத்தை பெற்று தரக்கூடியது. எனவே விவசாயிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ள தனியார் நபர்கள் தேனீ வளர்ப்பில் இருக்கக்கூடிய புதிய திட்டங்கள் மற்றும் மானியங்களை அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். பின்னா் கருத்தரங்கில் அமைக்கப்பட்டிருந்த தேனீ வளர்ப்பு குறித்த கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார். இக்கருத்தரங்கில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.