< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
|30 Sept 2022 9:46 PM IST
போடி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போடி அருகே உள்ள கோணாம்பட்டி புது காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் தீபக் (வயது 28). அதே ஊரை சேர்ந்தவர் பிரவீன் குமார் (25). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இ்ருந்து வந்தது. இந்நிலையில் இன்று பிரவீன் குமார், திம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜதுரை (27) ஆகியோர் சேர்ந்து ஸ்ரீராம் தீபக் வீட்டின் முன்பு நின்றிருந்த ஜீப்பை அடித்து நொறுக்கினர். அதை ஸ்ரீராம்தீபக் தட்டிக்கேட்டார். அப்போது அவரை, இருவரும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஸ்ரீராம் தீபக் போடி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமார், ராஜதுரை ஆகிய 2 பேரை கைது செய்தனர்.