தேனி
முன்விரோதம் காரணமாகஇரு தரப்பினர் மோதலில் வாலிபருக்கு கத்திக்குத்து:4 பேர் கைது
|வீரபாண்டியில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
வீரபாண்டி கிழக்கு தெருவை சோ்ந்தவர் ஹரிஹரன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் இன்பநிதி. கடந்த 17-ந்தேதி பொங்கல் விழாவையொட்டி விளையாட்டு போட்டி நடத்தியது தொடர்பாக இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஹரிஹரன் தனது மாமா மகள் அஜிதா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி கொண்டு இருந்தார்.
அப்ேபாது இன்பநதி மற்றும் அவரது உறவினர்களான அசோக்குமார், மூவேந்திரராஜா உள்பட 13 பேர் அங்கு வந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கம்பு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஹரிஹரனை தாக்கினர். இதையடுத்து இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மற்றொரு தரப்பினர் ஹரிஹரனை கத்தியால் குத்தியதுடன், அஜிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் அசோக்குமார், மூவேந்திரராஜா மற்றும் சுரேஷ், கருப்பையா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.