ராமநாதபுரம்
ஆப்பாயில் கலைந்து இருந்ததால் பரோட்டா மாஸ்டருக்கு 'பளார் அறை'
|ஆப்பாயில் கலைந்து இருந்ததால் பரோட்டா மாஸ்டருக்கு ‘பளார் அறை’ கொடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொண்டி,
தொண்டி பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருபவர் மண்மலகரை கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 40).
இந்த ஓட்டலுக்கு தொண்டி அருகே உள்ள நரிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கவின் (வயது21) என்பவர் சாப்பிட வந்துள்ளார். அங்கு ஆப்பாயில் கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர், திடீரென பரோட்டா மாஸ்டர் பிரபாகரன் அருகில் சென்று ஆப்பாயில் கலைந்து இருக்கிறது எனகூறியுள்ளார்.அதற்கு அவர் வேறு ஆப்பாயில் போட்டு தருவதாக கூறியுள்ளார். அப்போது கவின், பிரபாகரனை கன்னத்தில் பளாரென அறைந்துள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பிரபாகரன் தொண்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கவின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.