< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நீலகிரியில் உணவு தேடி தெருக்களில் அலைந்த கரடி - வீட்டின் கதவை உடைத்து அட்டகாசம்
|21 Jun 2023 10:58 PM IST
ரவிச்சந்திரன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றை கரடி சாப்பிட்டுச் சென்றுள்ளது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தெருக்களில் நள்ளிரவு நேரங்களில் கரடிகள் உலா வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு உணவு தேடி தெருக்களில் சுற்றிய கரடி ஒன்று, அங்குள்ள அங்கன்வாடியின் கதவை உடைக்க முயன்றுள்ளது.
அது முடியாமல் போகவே, அருகில் இருந்த ரவிச்சந்திரன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து அட்டகாசம் செய்ததுடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றை சாப்பிட்டுச் சென்றுள்ளது. இதில் நல்வாய்ப்பாக ரவிச்சந்திரனின் குடும்பத்தினர் தங்கள் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்ததால், கரடியின் தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளனர். கரடிகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.