< Back
மாநில செய்திகள்
கொல்லிமலையில்  கரடி தாக்கி விவசாயி படுகாயம்
நாமக்கல்
மாநில செய்திகள்

கொல்லிமலையில் கரடி தாக்கி விவசாயி படுகாயம்

தினத்தந்தி
|
2 Dec 2022 12:15 AM IST

சேந்தமங்கலம்:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு ஊராட்சி ஓலையாறு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 46). விவசாயி. இவர் அங்குள்ள வனப்பகுதி அருகே உள்ள தனது தோட்டத்திற்கு சென்று வருவது வழக்கம். அதேபோல் நேற்று அதிகாலை ராஜேந்திரன் தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்குள்ள புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென ராஜேந்திரன் மீது பாய்ந்து தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சுதாாரித்து கொண்டு கரடியின் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.

இதை தொடர்ந்து கொல்லிமலை செம்மேட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கொல்லிமலை வனச்சரகர் சுப்பராயன் மற்றும் வாழவந்தி நாடு போலீசார் விவசாயி ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தினர். விவசாயியை கரடி தாக்கிய சம்பவம் கொல்லிமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்