தஞ்சாவூர்
கல்லூரி மாணவர்களுக்கான 'பீச்' வாலிபால் இறுதி போட்டி
|மனோரா கடற்கரையில் கல்லூரி மாணவர்களுக்கான பீச்் வாலிபால் இறுதி போட்டியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
மனோரா கடற்கரையில் கல்லூரி மாணவர்களுக்கான பீச்் வாலிபால் இறுதி போட்டியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
பீச் வாலிபால் போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தஞ்சை மாவட்ட பிரிவு சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான திருச்சி மண்டல அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பீச் வாலிபால் இறுதி போட்டி சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மனோரா கடற்கரையில் நடந்தது.
முன்னதாக நடந்த ஆட்டங்களில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து இறுதி போட்டியினை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
மாணவர்கள் வெற்றி
சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார். இறுதி போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தனர். குத்தாலம் கல்லூரி மாணவர்கள் 2-ம் இடத்தையும், அதிராம்பட்டினம் காதர்முகையதீன் கல்லூரி மாணவர்கள் 3-ம் இடத்தையும், தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் 4-ம் இடத்தையும் பெற்றனர்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட், பயிற்சி கலெக்டர் விஷ்ணுப்பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.