< Back
மாநில செய்திகள்
கரும்புச்சாறு கடை வேலைக்கு பி.இ.-பி.ஏ. பட்டதாரிகள் தேவை - வைரலாகும் பேனரால் பரபரப்பு
மாநில செய்திகள்

கரும்புச்சாறு கடை வேலைக்கு பி.இ.-பி.ஏ. பட்டதாரிகள் தேவை - வைரலாகும் பேனரால் பரபரப்பு

தினத்தந்தி
|
19 July 2024 11:37 PM IST

கரும்புச் சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை. சம்பளம் ரூ.18 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே மெஞ்ஞானபுரத்தில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையில் கரும்புச்சாறு பிழிந்தெடுத்து விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. அந்த கடையில் அவ்வப்போது வேலைக்கு ஆட்கள் தேவை என பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருக்கும்.அதன்படி. வேலைக்கு இளைஞர்கள் சிலர் வருவார்கள். சில நாட்களில் நின்று விடுவார்கள்.

இந்த நிலையில் கடைக்காரருக்கு திடீரென புது விதமான யோசனை தோன்றியுள்ளது. அதன் விளைவாக வேலைக்கு ஆட்கள் தேவை என வைக்கப்பட்டுள்ள அந்த பேனரில், "கரும்புச் சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை. சம்பளம் ரூ.18 ஆயிரம். வேலை நேரம்- காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை. கல்வி தகுதி- பி.இ., பி.ஏ., பி.எஸ்சி., வயது வரம்பு 25-ல் இருந்து 40 வரை" எனவும், தொடர்புக்கு செல் நம்பரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்