தஞ்சாவூர்
26 ஊராட்சிகளுக்கு ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வண்டிகள்
|26 ஊராட்சிகளுக்கு ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வண்டிகள் வழங்கப்பட்டன.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் 26 ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் மேம்பாட்டிற்காக மின்கல வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய ஆணையர் சிவகுமார் வரவேற்று பேசினார். விழாவில் தஞ்சை மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்துச்செல்வம் கலந்துகொண்டு 26 ஊராட்சிகளுக்கு தூய்மை இந்தியா இயக்கம் பகுதி 2 மற்றும் 15-வது நிதி குழு மானிய நிதியிலிருந்து ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் மின்கல வண்டிகளை வழங்கினார். விழாவில் மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு உறுப்பினர் கோவி.அய்யாராசு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நாசர், ஒன்றிய கவுன்சிலர் விஜயன், எம்.எல்.ஏ. நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா நன்றி கூறினார்.