< Back
மாநில செய்திகள்
48 ஊராட்சிகளுக்கு மின்கல வாகனங்கள்
விழுப்புரம்
மாநில செய்திகள்

48 ஊராட்சிகளுக்கு மின்கல வாகனங்கள்

தினத்தந்தி
|
29 Aug 2023 12:15 AM IST

காணை ஒன்றியத்தில் 48 ஊராட்சிகளுக்கு மின்கல வாகனங்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

விழுப்புரம்:

காணை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 48 ஊராட்சிகளுக்கு மின்கல வாகனங்கள் வழங்கும் விழா நேற்று காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, டாக்டர் இரா.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காணை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி வரவேற்றார்.

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு 48 ஊராட்சிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் மின்கல வாகனங்களை வழங்கினார்.

புதிய கட்டிடங்கள் திறப்பு

இதை தொடர்ந்து காங்கேயனூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.12 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், நல்லாப்பாளையம் ஊராட்சியில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், கடையம் ஊராட்சியில் ரூ.19 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், பனமலை ஊராட்சியில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் நல்லாப்பாளையம், கடையம் ஊராட்சியில் பகுதிநேர ரேஷன் கடை ஆகியவற்றையும் அமைச்சர் க.பொன்முடி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் கல்பட்டு ராஜா, மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், சிவக்குமார், கல்விக்குழு உறுப்பினர் முருகன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் வீரராகவன், காணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், ஞான.சீனிவாசன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயமாலினி, குபேந்திரன், சேட்டு, பாரதி சசிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் கமலநாதன், ஜெயக்குமார், நெடுஞ்செழியன், சத்யராஜ், நித்யா, கல்யாணசுந்தரம், தாசில்தார்கள் வேல்முருகன், ஆதிசக்தி சிவக்குமரிமன்னன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்