< Back
மாநில செய்திகள்
3 பேரூராட்சிகளுக்கு    குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்கள்    அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
கடலூர்
மாநில செய்திகள்

3 பேரூராட்சிகளுக்கு குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
12 Dec 2022 12:15 AM IST

3 பேரூராட்சிகளுக்கு குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.


குறிஞ்சிப்பாடி,

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டிற்காக வீடுகள் தோறும் சென்று மக்களிடம் குப்பைகளை சேகரித்திடும் வகையில், கடலூர் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.12 லட்சம் மதிப்பில், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு 3 வாகனங்களும், புவனகிரிக்கு 4, ஸ்ரீமுஷ்ணம் 1 என்று மொத்தம் 8 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.இந்த வாகனங்களை அந்தந்த பேரூராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, நேற்று குறிஞ்சிப்பாடியில் நடைபெற்றது. இதற்கு குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மன்றசெயல் அலுவலர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலாகுமார், துணை தலைவர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேட்டரி வாகனங்களை, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் சிவக்குமார், வடலூர் நகரமன்ற தலைவர் சிவக்குமார், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், நகர செயலாளர் குறிஞ்சிப்பாடி ஜெய்சங்கர், கவுன்சிலர்கள் விடுதலை சேகர், செந்தில்நாதன், அருள்முருகன், முருகானந்தம், பேரூராட்சி இளநிலை உதவியாளர் முருகவேல், துப்புரவு ஆய்வாளர் குருசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்