< Back
மாநில செய்திகள்
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது - வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 10 நிமிடம் குளிக்க தடை
மாநில செய்திகள்

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது - வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 10 நிமிடம் குளிக்க தடை

தினத்தந்தி
|
9 Aug 2022 11:40 PM IST

குற்றாலம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 10 நிமிடம் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் தான் சீசன் தொடங்கியது. தற்போது சீசன் மிகவும் அருமையாக உள்ளது. சாரல் மழை விட்டுவிட்டு பெய்கிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து அருவிகளில் குளித்து சென்றனர். மெயின் அருவியில் அதிகமான ஆண்கள் வந்ததால் அவர்களை நீண்ட வரிசையில் நிறுத்தி போலீசார் குளிக்க செய்தனர்.

நேற்று இரவில் பலத்த சாரல் மழை பெய்தது. இதனால் அருவிகளில் காலையில் நீர்வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் இன்று காலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். சிறிது நேரத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. எனவே சுமார் 10 நிமிடங்களில் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க போலீசார் அனுமதித்தனர்.

மேலும் செய்திகள்