< Back
மாநில செய்திகள்
மணிமுத்தாறு அருவியில் குளிக்க 4 நாட்களுக்கு தடை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மணிமுத்தாறு அருவியில் குளிக்க 4 நாட்களுக்கு தடை

தினத்தந்தி
|
29 Aug 2023 2:42 AM IST

பராமரிப்பு பணி காரணமாக, மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று முதல் 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று மணிமுத்தாறு அருவி. இந்த அருவிப்பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 1-ந்தேதி வரை 4 நாட்கள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்