< Back
மாநில செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவில் யானையின் மன அழுத்தத்தைப் போக்க ரூ.23.50 லட்சத்தில் குளியல் தொட்டி
மாநில செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் யானையின் மன அழுத்தத்தைப் போக்க ரூ.23.50 லட்சத்தில் குளியல் தொட்டி

தினத்தந்தி
|
4 July 2022 5:26 AM IST

கோவில் யானையின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், பிரத்யேக குளியல் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 26 வயது நிரம்பிய கோவில் யானை பார்வதிக்கு கண்ணில் வெண்புரை பாதித்து பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு கால்நடை மருத்துவ நிபுணர்கள் குழு சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் யானையின் மன அழுத்தத்தைப் போக்க அதற்கான பிரத்யேக குளியல் தொட்டியை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குளியல் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்