< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில்சுதந்திர தினத்தன்று மதுக்கடைகள், மதுபானக்கூடங்கள் மூடல்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில்சுதந்திர தினத்தன்று மதுக்கடைகள், மதுபானக்கூடங்கள் மூடல்

தினத்தந்தி
|
13 Aug 2023 12:45 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று மதுக்கடைகள், மதுபானக்கூடங்கள் மூடப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மது விற்பனை இல்லாத நாளாக தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டலில் இயங்கும் மதுபான கூடம் உள்பட அனைத்தும் நாளை மறுநாள் தற்காலிகமாக மூடப்படும். இதை மீறி மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மதுபான போக்குவரத்து ஏதும் செய்யக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்