< Back
மாநில செய்திகள்
மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படும்
சிவகங்கை
மாநில செய்திகள்

மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படும்

தினத்தந்தி
|
20 Oct 2022 12:15 AM IST

மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- வருகிற 24-ந் தேதி திருப்பத்தூரில் மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவுதினம் நடைபெறுவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 23-ந் தேதி பிற்பகல் 6 மணி முதல் 24-ந் தேதி வரை டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் மானாமதுரை, திருப்புவனம் ஆகியவற்றில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும். மேலும், 27-ந் தேதி காளையார்கோவிலில் மருது சகோதரர்கள், குரு பூஜை மற்றும் 29, 30-ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் உரிமம் பெற்ற கிளப், ஓட்டல்கள், கேண்டீன்களில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் ஆகியவை 26-ந் தேதி பிற்பகல் 6 மணி முதல் 27-ந் தேதி வரையிலும் மற்றும் 29-ந் தேதி மாலை 6 மணி முதல் 30-ந் தேதி வரையிலும் முழுவதுமாக மூடப்படும். 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சிவகங்கை, ராமநாதபுரம் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளும் முழுவதுமாக மூடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்