< Back
மாநில செய்திகள்
தடைகள் என்பது உடைப்பதற்காகத்தான் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

"தடைகள் என்பது உடைப்பதற்காகத்தான்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
9 Aug 2024 10:02 PM IST

மு.க.ஸ்டாலின், மாணவர்கள், தமிழ்ப்புதல்வன் திட்டம் “தடைகள் என்பது உடைப்பதற்காகத்தான்” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் உயர உயரப் படிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"வாழ்வில் சில நாட்கள் மறக்க முடியாததாக – வரலாற்றில் நம்மை இடம்பெற வைக்கக்கூடியதாக அமையும். அத்தகைய நாள், தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட இந்தப் பொன்னாள்!

மாணவக் கண்மணிகளே! நீங்கள் உயர உயரப் படிக்க வேண்டும். தடைகள் என்பது உடைப்பதற்காகத்தான். உங்களுக்குத் துணையாக – பக்கபலமாக, உங்களது பெற்றோர்கள் மட்டுமல்ல, நானும் – எனது திராவிட மாடல் அரசும் இருக்கிறோம்! என்றும் இருப்போம்!"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்