< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
புல்லாவெளி-சோலைக்காடு இடையே மலைப்பாதையில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?; வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
|29 April 2023 2:30 AM IST
புல்லாவெளி-சோலைக்காடு இடையே மலைப்பாதையில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளன.
கொடைக்கானல் கீழ்மலை பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளியில் இருந்து சோலைக்காடு வரையிலான மலைப்பாதையில் தார்சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது புல்லாவெளி-சோலைக்காடு இடையே தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாலையில் சில இடங்களில் இன்னும் தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை.
இதனால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் அந்த சாலையில் சென்று வருகின்றனர். இந்த சாலையோரம் 200 அடி அபாய பள்ளத்தாக்கு உள்ளது. எனவே இந்த மலைப்பாதையில் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.