< Back
மாநில செய்திகள்
பழனி பஸ் நிலைய நடைமேடையில் தடுப்பு கம்பிகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பழனி பஸ் நிலைய நடைமேடையில் தடுப்பு கம்பிகள்

தினத்தந்தி
|
13 Oct 2023 6:00 AM IST

பழனி பஸ் நிலைய நடைமேடையில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதை தடுக்க தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.

பழனி பஸ்நிலையத்துக்கு சுற்று வட்டார பகுதி மக்கள், பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். வாரவிடுமுறை, விசேஷ நாட்களில் பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். இந்நிலையில் பஸ்நிலைய நடைமேடையில் பயணிகளுக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள்களை சிலர் நிறுத்தி செல்கின்றனர். இதனால் நடைமேடையில் பயணிகள் நடந்து செல்லவே கடும் சிரமம் அடைந்தனர்.

இந்நிலையில் பழனி பஸ்நிலைய நடைமேடை ஆக்கிரமிப்பு குறித்து கடந்த மாதம் 24-ந்தேதி 'தினந்தந்தி'யில் செய்தி வெளியானது. அதையடுத்து பஸ்நிலைய நடைமேடையில் மோட்டார் சைக்கிள் நிறுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பஸ்நிலையத்தின் மேற்கு நுழைவு வாயில் வழியே மோட்டார் சைக்கிள்கள் செல்வதை தடுக்கும் விதமாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள், பயணிகள் வரவேற்று உள்ளனர். அதேவேளையில் பஸ்நிலையத்தில் முழுமையாக ஆக்கிரமிப்பை அகற்றி சுகாதாரத்தை பேண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்