< Back
மாநில செய்திகள்
வைகை ஆற்றில் ரூ.30 கோடியில் தடுப்பணை
சிவகங்கை
மாநில செய்திகள்

வைகை ஆற்றில் ரூ.30 கோடியில் தடுப்பணை

தினத்தந்தி
|
16 April 2023 12:15 AM IST

மானாமதுரை வைகை ஆற்றில் ரூ.30 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

மானாமதுரை

மானாமதுரை வைகை ஆற்றில் ரூ.30 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

அணை கட்டும் பணி

வைகை ஆற்றின் வலது பிரதான கால்வாய் மூலம் மானாமதுரை அருகே கட்டிகுளம் கண்மாய் பாசன வசதி பெறுகிறது. 396 எக்டேர் பரப்பளவுள்ள கண்மாயை நம்பி 1,100 எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் போது விவசாயிகள் ஆற்றில் மண் கரை அமைத்து கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்கின்றனர். இதனை தவிர்க்க கட்டிகுளம் கால்வாய் முகப்பில் அணை கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்ததின் பேரில் வைகை ஆற்றில் கட்டிகுளம் கால்வாய் முகப்பில் ரூ.30 கோடி செலவில் தடுப்பணை கட்ட தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலையில் பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. அணைக்கட்டு வருவதால் கட்டிகுளம், முத்தனேந்தல், மிளகனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் பாசன வசதி பெறும். மேலும் பொதுப்பணித்துறை சார்பில் அணைக்கட்டு திட்டம் குறித்த மினியேச்சர் சிற்பமும் பார்வைக்கு முதன் முறையாக வைக்கப்பட்டிருந்தது.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, ஒன்றியக்குழு தலைவர் லதா அண்ணாத்துரை, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், யூனியன் துணை சேர்மன் முத்துச்சாமி, நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் ராஜாமணி, அண்ணாத்துரை, நகர செயலாளர் பொன்னுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயமூர்த்தி, கட்டிக்குளம் ஊராட்சி தலைவர் சாந்தி தமிழ்நேசன், இடைக்காட்டூர் ஊராட்சி தலைவர் சண்முகநாதன், ராஜகம்பீரம் ஊராட்சி தலைவர் முஜிப்ரகுமான், மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா, நகர் மாணவரணி அமைப்பாளர் கார்த்திக், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர்கள் மோகன்குமார், உதவிப்பொறியாளர்கள் செந்தில்குமார் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்