< Back
மாநில செய்திகள்
வக்கீல்கள் சங்க கூட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

வக்கீல்கள் சங்க கூட்டம்

தினத்தந்தி
|
16 Oct 2023 12:15 AM IST

சீர்காழியில் வக்கீல்கள் சங்க கூட்டம் நடந்தது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வக்கீல்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசு வக்கீல் முத்துக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மூத்த வக்கீல்கள் சங்க வளர்ச்சி குறித்து பேசினர்.தொடர்ந்து இந்த ஆண்டுக்கான புதிய நிர்வாகி தேர்வு நடைபெற்றது. இதில் வக்கீல் சங்க தலைவராக ஸ்டாலின், செயலாளராக நெடுஞ்செழியன், பொருளாளராக தியாகராஜன், துணைத் தலைவராக சிங்காரவேலன், இணை செயலாளராக ராதிகா, செயற்குழு உறுப்பினர்களாக மூத்த வக்கீல்கள் சந்திரமோகன், செல்வராஜ், பாலாஜி மற்றும் பல்வேறு பொறுப்புகளுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் சீர்காழி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் போக்சோ கோர்ட்டும் தொடங்க வேண்டும், இதுபோல் கோர்ட்டு வளாகத்தில் கிளை தபால் நிலையம் தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். முடிவில் வக்கீல் ஞானப்பிரகாசம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்