ராமநாதபுரம்
பக்ரீத் சிறப்பு தொழுகை
|கீழக்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.
கீழக்கரை,
கீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபை சார்பில் வடக்கு தெருவில் அமைந்துள்ள மணல்மேடு திடலிலும் முஹைதீனிய்யா பள்ளி வளாக திடலிலும் மஸ்ஜித் மன்பஈ ஜூம்ஆ பள்ளிவாசலிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபை தலைவர் கே.எஸ்.ரெத்தின முகமது தலைமையில் துணைத்தலைவர் அப்துல் ஹமீது முன்னிலையில் மணல்மேடு திடலில் பேராசிரியர் அஹமது ஹூசைன் ஆஸிப் ஜும்மா உரையாற்றினார்.
முஹைதீனிய்யா பள்ளி வளாக திடலில் ஜமால் ஆலிம், மஸ்ஜித் மன்பஈ ஜும்மா பள்ளியில் கலீல் ஆலிம் தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் சலாம் கூறி கட்டித் தழுவி பெருநாளை கொண்டாடினர்.கீழக்கரை வடக்கு தெரு தொழில் அதிபர் அப்துல்லா செய்யது ஆப்தீன், கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் முகமது ஹனிபா, தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், 9-வது வார்டு கவுன்சிலர் நசீருதீன் உள்பட பலர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.