ஈஷா சிவராத்திரி விழாவில் பன்வாரிலால் புரோகித், வசுந்தரா ராஜே பங்கேற்பு
|ஈஷா யோகா மைய மஹா சிவராத்திரி விழாவில் நடிகை, தமன்னா, பூஜா ஹெக்டே பங்கேற்றுள்ளனர்.
கோவை,
கோவை ஈஷா யோகா மையத்தில் 30-வது ஆண்டு மஹா சிவராத்திரி விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பங்கேற்றுள்ளார். இவ்விழாவில் அவரது துணைவியார் டாக்டர். சுதேஷ் தன்கர், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே மத்திய இணை மந்திரி எல். முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்த அவர்களை சத்குரு அவர்கள் வரவேற்றார். பின்னர் அவர்கள் ஈஷாவில் உள்ள சூரிய குண்டம், நாகா சந்நிதி, லிங்க பைரவி, தியான லிங்கம் உள்ளிட்ட சக்தி ஸ்தலங்களுக்கு சென்று தரிசித்தனர். மேலும் தியான லிங்கத்தில் நடைபெற்ற பஞ்ச பூத க்ரியா நிகழ்விலும் பங்கேற்றனர். விழாவில் நடிகை தமன்னா, பூஜா ஹெக்டே பங்கேற்றுள்ளனர்.
விழாவில் இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர். விழா மேடையானது வாரணாசி கோவில் கோபுரங்களின் தோற்றத்துடன் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டிருந்து, இது அனைவரையும் கவர்ந்திழுத்தது.