< Back
மாநில செய்திகள்
விஜய் ரசிகர்கள் வைத்திருந்த பதாகைகள் அகற்றம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

விஜய் ரசிகர்கள் வைத்திருந்த பதாகைகள் அகற்றம்

தினத்தந்தி
|
19 Oct 2023 1:53 AM IST

தஞ்சையில் விஜய் ரசிகர்கள் வைத்திருந்த பதாகைககளை போலீசார் அகற்றினர்.

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று (வியாழக்கிழமை) வெளியாகிறது. தஞ்சை மாநகரில் 2 தியேட்டர்களில் லியோ திரைப்படம் திரையிடப்படுகிறது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் சார்பில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. தஞ்சை பர்மாபஜார் பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்கு வெளியே வரிசையாக பெரிய அளவில் லியோ திரைப்பட விளம்பர பதாகைகள் விஜய் ரசிகர்கள் சார்பில் வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்றுஇரவு திடீரென 10-க்கும் மேற்பட்ட போலீசார் வந்து லியோ திரைப்பட விளம்பர பதாகைகளை எல்லாம் அகற்றும்படி உத்தரவிட்டனர்.

முறையாக அனுமதி பெறாமல் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் விளம்பர பதாகைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் தாங்கள் வைத்திருந்த விளம்பர பதாகைகளை எல்லாம் அகற்றினர். பின்னர் அந்த பதாகைகளை எல்லாம் தியேட்டர் வளாகத்திற்குள் கொண்டு சென்று அந்த வளாகத்திற்குள் கம்புகளை கட்டி விளம்பர பதாகைகளை வரிசையாக வைத்தனர்.

மேலும் செய்திகள்