நாமக்கல்
பரமத்திவேலூரில் பொது இடங்களில் வைத்திருந்த பேனர்கள் அகற்றம்
|பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி, வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், உள்ளிட்ட பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூராகவும், ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், உயிரிழப்பு ஏற்படுத்தும் வகையிலும் கண்ணீர் அஞ்சலி பேனர்கள், கோவில் விளம்பரங்கள், கட்சி விளம்பரங்கள், தனியார் நிறுவன விளம்பர பேனர்கள் உள்ளிட்ட ஏராளமான பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு வருகிறது.
தற்போது அடிக்கடி சூறாவளி காற்று வீசுவதால் விளம்பர பேனர்கள் கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே பெரிய அளவில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து வேலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது.