< Back
மாநில செய்திகள்
தடை செய்யப்பட்டபுகையிலை பொருட்கள் பறிமுதல்
ஈரோடு
மாநில செய்திகள்

தடை செய்யப்பட்டபுகையிலை பொருட்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
15 Oct 2023 6:08 AM IST

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தூர்,

கோபி அருகே உள்ள சவுண்டப்பூர் பகுதியில் கோபி போலீசார் ரோந்து சென்று வந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டனர். உடனே கடையில் இருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர் அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (வயது 50) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தங்கவேலை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 10 பாக்கெட் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்