< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
வங்கியாளர்கள் ஆய்வுக்கூட்டம்
|2 Oct 2023 3:39 AM IST
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வங்கியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. முன்னிலை வகித்தார். கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட அளவிலான வங்கிகள் மூலம் விவசாயம், கல்விக்கடன் உதவி, வீட்டிற்கான கடன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கி வங்கியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதில் முதன்மை மண்டல மேலாளர் நாகேஸ்வரராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன், ஆர்.பி.ஐ. மாவட்ட மேலாளர் சந்திரசேகர், நபார்டு மாவட்ட மேலாளர் அனீஷ்குமார் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.