< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
கடம்பத்தூர் அருகே வங்கி மேலாளருக்கு கத்திவெட்டு; 4 பேருக்கு வலைவீச்சு
|5 Sept 2023 4:11 PM IST
கடம்பத்தூர் அருகே தனியார் வங்கி மேலாளரை ஒரு கும்பல் கத்தியால் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அருகேயுள்ள வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகன் பிரதீப்குமார் (வயது 36). இவர் சென்னை தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களுடன் ஸ்ரீதேவிகுப்பம் பெட்ரோல் பங்கு அருகில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் சரமாரியாக தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.இதனையடுத்து பலத்த காயம் அடைந்த பிரதீப்குமாரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கத்தியால் வெட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.