< Back
மாநில செய்திகள்
வங்கி கடன் மோசடி: மருந்து நிறுவன உரிமையாளர்கள் 3 பேருக்கு 2 ஆண்டு ஜெயில் - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு
சென்னை
மாநில செய்திகள்

வங்கி கடன் மோசடி: மருந்து நிறுவன உரிமையாளர்கள் 3 பேருக்கு 2 ஆண்டு ஜெயில் - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
27 July 2022 10:48 AM IST

வங்கி கடன் மோசடி செய்த மருந்து நிறுவன உரிமையாளர்கள் 3 பேருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை சூளைமேட்டில் செயல்பட்டு வந்த தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஜயன், இயக்குனர்கள் நாகராஜன், விஜயகுமார் ஆகியோர் தங்களது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நிறுவனத்துக்கு சொந்தமாக திருவான்மியூரில் உள்ள காலி இடத்தை காண்பித்து சென்னை யூகோ வங்கி மெயின் கிளையில் ரூ.70 லட்சம் கடனாக பெற்றனர்.

இதன்பின்பு தான் அந்த இடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட இடம் என்பது வங்கி நிர்வாகத்துக்கு தெரியவந்தது. இதன்மூலம் வங்கிக்கு ரூ.1 கோடியே 50 ஆயிரம் இழப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் கடந்த 2011-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடந்தது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு, மருந்து உற்பத்தி நிறுவனத்தைச் சேர்ந்த விஜயன், நாகராஜன், விஜயகுமார் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

மேலும் செய்திகள்