< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
வங்கி கடன் உதவி வழங்கும் விழா
|8 Jun 2022 10:20 PM IST
தேனி கலெக்டர் அலுவலகத்தில் வங்க கடன் உதவி வழங்கும் விழா நடந்தது.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 75-வது ஆண்டு சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி வங்கி கடனுதவி வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, பல்வேறு வங்கிகள் சார்பில் 53 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 30 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கி பேசினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார் மற்றும் வங்கி அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.