திருவள்ளூர்
திருவள்ளூரில் மின்கசிவால் வங்கியில் தீ விபத்து - மின்சாதன பொருட்கள் எரிந்து நாசம்
|திருவள்ளூரில் மின்கசிவு காரணமாக வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல மின்சாதன பொருட்கள் எரிந்து நசமானது.
திருவள்ளூர் நகரின் மைய பகுதியான பஜார் வீதியில் இந்தியன் வங்கி ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 5 மணியளவில் அந்த வங்கியின் உள்ளே இருந்து தீப்பிடித்து புகை மூட்டமாக வெளியே வந்தது. இதை கண்ட அந்த பகுதியை மக்கள் உடனடியாக திருவள்ளூர் டவுன் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு அலுவலர் பாஸ்கர் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை மேலும் பரவாமல் அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் நகை கடன் ஆவணங்கள், லேப்டாப், மின்விசிறிகள், டேபிள்கள், கம்ப்யூட்டர், மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.