< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை வழங்க கோரி 27-ந்தேதி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தம்..!
|13 Jun 2022 4:49 AM IST
வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை வழங்க கோரி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் 27-ந்தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
சென்னை,
வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை மாற்றி அமைப்பதுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள இதர பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து வருகிற 25-ந்தேதி (4-வது சனிக்கிழமை) மற்றும் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்கள் வார விடுமுறை. இதையடுத்து 27-ந்தேதி (திங்கட்கிழமை) வேலை நிறுத்தம் என்பதால் அன்று பரிவர்த்தனை நடைபெறாது என்று வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.