< Back
மாநில செய்திகள்
வங்கி ஏ.டி.எம். முன்பு ஆண் பிணம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

வங்கி ஏ.டி.எம். முன்பு ஆண் பிணம்

தினத்தந்தி
|
9 Oct 2023 12:15 AM IST

உடன்குடியிலுள்ள வங்கி ஏ.டி.எம். முன்பு ஆண் பிணமாக கிடந்தார்.

குலசேகரன்பட்டினம்:

உடன்குடி திசையன்விளை ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. இந்த எந்திரம் முன்பு நேற்று முன்தினம் காலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் விரைந்து சென்று ஆண் பிணத்தை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்