< Back
மாநில செய்திகள்
கஞ்சா குற்றவாளிகள் 19 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

கஞ்சா குற்றவாளிகள் 19 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

தினத்தந்தி
|
17 Jun 2022 11:02 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா குற்றவாளிகள் 19 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2 வருடங்களாக கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 19 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை 26 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்