< Back
மாநில செய்திகள்
தீக்காயம் அடைந்த பானிபூரி வியாபாரி சாவு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

தீக்காயம் அடைந்த பானிபூரி வியாபாரி சாவு

தினத்தந்தி
|
7 Aug 2023 12:15 AM IST

குடிசை வீடு எரிந்த விபத்தில் தீக்காயம் அடைந்த பானிபூரி வியாபாரி சாவு

மணல்மேடு:

கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூர் தாலுகா பட்டளப்பள்ளி கோடியூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 55). இவர் கடந்த 7 ஆண்டுகளாக மணல்மேடு அடுத்த பட்டவர்த்தி குறிச்சி ரோடு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இளந்தோப்பு பஸ் நிறுத்தம் அருகே பானிபூரி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி இரவு இவரது குடிசை வீடு மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மணல்மேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ பரவாமல் அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த சேட்டு தீக்காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சேட்டு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சேட்டு மகன் விஜய் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்