< Back
மாநில செய்திகள்
பண்டரிநாதன்-ஆண்டாள் நாச்சியார்  திருக்கல்யாண உற்சவம்
கரூர்
மாநில செய்திகள்

பண்டரிநாதன்-ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண உற்சவம்

தினத்தந்தி
|
16 Jan 2023 6:33 PM GMT

கரூரில் பண்டரிநாதன்-ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண உற்வசம்

கரூர் நகர பகுதியில் உள்ள பண்டரிநாதன் சன்னதி தெருவில் பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் பஜனை மடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருகல்யாண உற்வசம் மிக விமரிசையாக நடைபெறு வழக்கம். அதேபோல் இந்தாண்டு மார்கழி மாத திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் பண்டரிநாதன் மற்றும் மூலவர் பண்டரிநாதன் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு அதிகாலை பால், பழம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்ப அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் பண்டரிநாதன் மற்றும் ருக்மணி சமேத தாயாரை ஆலய மண்டபத்தில் மணக்கோலத்தில் அலங்காரம் செய்தனர்.அதை தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் பட்டாச்சாரியார், பிரத்தியேக யாக குண்டங்கள் அமைத்து திருக்கல்யாண வழிபாடு நிகழ்ச்சியின் வேத மந்திரங்கள் ஓதியபடி சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திரளான பக்தர்கள்

பின்னர் மேல தாளங்கள் முழங்க ருக்மணி சமேத பண்டரிநாதன் சுவாமிக்கும்-ஆண்டாள் நாச்சியார் சுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு பால், பழம் மற்றும் மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் மஞ்சள் கயிறு, பட்டாடை உள்ளிட்ட பொருட்களை வழங்கி சிறப்பித்தனர்.

இதில், கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்