< Back
மாநில செய்திகள்
கால்நடைகளின் கூடாரமாக மாறிய பந்தலூர் பஸ் நிலையம்
நீலகிரி
மாநில செய்திகள்

கால்நடைகளின் கூடாரமாக மாறிய பந்தலூர் பஸ் நிலையம்

தினத்தந்தி
|
26 Sept 2023 2:15 AM IST

கால்நடைகளின் கூடாரமாக பந்தலூர் பஸ் நிலையம் மாறி உள்ளது.

பந்தலூர்

பந்தலூர் பஸ் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் சுல்த்தான்பத்தேரி, கோவை, சேலம், திருப்பூர் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் பந்தலூர் தாலுகா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கேரள பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதற்கிடையே பஸ் நிலைய இருபுறமும் நுழைவுவாயில்கள் அமைக்கப்படவில்லை. இதனால் கால்நடைகள் கூட்டமாக வந்து பஸ் நிலையத்திற்குள் ஓய்வெடுத்து வருகின்றன. இதனால் கால்நடைகளின் கூடாரமாக மாறி வருகிறது. மேலும் பஸ் நிலையத்தில் சாணம் உள்ளிட்ட கழிவுகள் கிடக்கிறது. இதனால் மாணவர்கள், பயணிகள் அமர முடியாமலும், பஸ்சுக்காக காத்திருக்க முடியாமலும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறும்போது, பந்தலூர் பஸ் நிலையம் கால்நடைகளின் கூடாரமாக மாறி விட்டதால், அசுத்தமாக காணப்படுகிறது. அவை பயணிகளை முட்ட வருகிறது. இதனால் தினமும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையை போக்க பஸ் நிலையத்திற்குள் கால்நடைகள் வராமல் இருக்க நுழைவுவாயில்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்