< Back
மாநில செய்திகள்
வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
கரூர்
மாநில செய்திகள்

வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு

தினத்தந்தி
|
11 Jan 2023 12:06 AM IST

வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்தது.

கரூர் மாவட்டம் நொய்யல், நடையனூர், கோம்புப்பாளையம், நத்தமேட்டு பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,000 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளனர். வாழைத்தார்கள் நன்கு விளைந்தவுடன் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் பூவன் தார் ரூ.250-க்கும், மொந்தன் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.250-க்கும், பச்சை நாடன் ரூ.250-க்கும் விற்பனையானது.

நேற்று பூவன்தார் 600-க்கும், மொந்தன் ரூ.500-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும், பச்சைநாடன் ரூ.300-க்கும் விற்பனையானது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், நேற்று நடந்த ஏலத்தில் வாழைத்தார் குறைவாகவே வந்தது. அதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்களுக்கு முன்பு வாழைத்தார் வரத்து அதிகரிக்கும். அப்போது வாழைத்தார் கொண்டு வந்தால் விலை இன்னும் அதிகமாக கிடைக்கும் என்பதால் விவசாயிகள் நேற்று குறைவாகவே கொண்டு வந்தனர். இனி வரும் காலங்களில் வாழைத்தார் விலை ஏறுமுகமாகவே இருக்கும் என கூறினர்.

மேலும் செய்திகள்