< Back
மாநில செய்திகள்
வாழைத்தார் விலை வீழ்ச்சி
கரூர்
மாநில செய்திகள்

வாழைத்தார் விலை வீழ்ச்சி

தினத்தந்தி
|
11 Jun 2023 11:52 PM IST

வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நடையனூர், திருக்காடுதுறை, முத்தனூர், நத்தமேடு பாளையம், கோம்புபாளையம், நன்செய் புகளூர், தவுட்டுப்பாளையம், பாலத்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பல்வேறு வாழைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். வாழைத்தார் விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தினசரி வாழைத்தார் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கும், பச்சநாடன் ரூ.300-க்கும், கற்பூரவல்லி ரூ.300-க்கும், ரஸ்தாளி ரூ.400-க்கும், மொந்தன் ரூ.500-க்கும் விற்பனையானது.நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.200-க்கும், பச்சநாடன் ரூ.200-க்கும், கற்பூரவல்லி ரூ.200-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கும், மொந்தன் ரூ.300-க்கும் விற்பனையானது.தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பாலும், உற்பத்தி அதிகமானதாலும் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்