< Back
மாநில செய்திகள்
சாலையில் மழைநீர் ேதங்கியதை கண்டித்து வாழை நடும் போராட்டம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

சாலையில் மழைநீர் ேதங்கியதை கண்டித்து வாழை நடும் போராட்டம்

தினத்தந்தி
|
16 May 2023 3:20 PM GMT

சாலையில் மழைநீர் ேதங்கியதை கண்டித்து வாழை நடும் போராட்டம் நடந்தது.

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 32-வது வார்டு பகுதியில் சமத்துவபுரம் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் ஜல்லிகள் பெயர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் சமத்துவபுரம் நுழைவு வாயிலில் இருந்து தூத்தூர் கல்லூரி செல்லும் சாலையின் நடுப்பகுதி குழியாக மாறி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பல நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து கலிங்கராஜபுரம் கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலையில் வாழை நடும் போராட்டம் நடந்தது. கிளை செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்சிறை வட்டார செயலாளர் அலெக்ஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன் உட்பட பலர் கண்டன உரையாற்றினர். இதில் கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாலையில் தண்ணீர் தேங்குவதை கண்டித்தும், சாலையை சீரமைக்க கோரியும் கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்