< Back
மாநில செய்திகள்
வாழை இலை விலை உயர்வு
தேனி
மாநில செய்திகள்

வாழை இலை விலை உயர்வு

தினத்தந்தி
|
12 Aug 2023 1:45 AM IST

ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வரத்து குறைந்ததால் வாழை இலை விலை உயர்ந்துள்ளது.

ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அணைக்கரைப்பட்டி, மூனாண்டிபட்டி, தர்மத்துபட்டி, புள்ளிமான்கோம்பை ஆகிய இடங்களில் வாழை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தேனி மாவட்டத்தில் அதிகமாக காற்று வீசுகிறது. இதன் காரணமாக வாழை இலை கிழிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் ஆண்டிப்பட்டி மார்க்கெட்டிற்கு வாழை இலை வரத்து அடியோடு குறைந்து விட்டது.

இதற்கிடையே வாழை இலைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. மார்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை ரூ.1,500-க்கு ஏலம் விடப்படுகிறது. சாதாரண நாட்களில் ரூ.500 முதல் ரூ.600 வரை ஏலம் போன நிலையில், தற்போது ஆடி மாதம் கோவில்களில் திருவிழா நடைபெறுவதால் வாழை இலை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்