< Back
மாநில செய்திகள்
விதிகளை மீறிய ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள விதைகள் விற்பனை செய்ய தடை
விருதுநகர்
மாநில செய்திகள்

விதிகளை மீறிய ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள விதைகள் விற்பனை செய்ய தடை

தினத்தந்தி
|
1 July 2023 2:00 AM IST

விதிகளை மீறிய ரூ.42 ஆயிரம் மதிப்புகள் விதைகளை விற்பனை செய்ய துணை இயக்குனர் தடை விதித்துள்ளார்.


விதிகளை மீறிய ரூ.42 ஆயிரம் மதிப்புகள் விதைகளை விற்பனை செய்ய துணை இயக்குனர் தடை விதித்துள்ளார்.

குழுவினர் ஆய்வு

விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா தலைமையில் ஆய்வாளர் அடங்கிய குழுவினர் விதை விற்பனை நிலையங்களில் குழு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதை விற்பனை உரிய விவரங்கள், விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல், முளைப்பு திறன் அறிக்கை, விதை சேமிப்பு, இருப்பு மற்றும் விலை விவர பலகை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் போது விற்பனைரசீது கொடுக்க வேண்டும். அதில் விதையின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதிநாள் ஆகியவற்றுடன் விவசாயியின் பெயர் மற்றும் முகவரியுடன், விதை வாங்குபவரின் கையொப்பம் பெற்றுக்கொண்டு சட்டத்தின் விதிமுறைக்கு உட்பட்டு விதை விற்பனை மேற்கொள்ள வேண்டும்.

விற்பனைக்கு தடை

தடை விதைசான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் பதிவு செய்து பதிவு சான்று பெற்ற விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

தொடர்ந்து விதைகளிள் தரத்தை உறுதி செய்வதற்காக மாதிரிகள் சேகரம் செய்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் போது விதைசட்ட விதிகளை மீறியது தொடர்பாக ரூ.42 ஆயிரத்து 700 மதிப்பிலான விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்