< Back
மாநில செய்திகள்
6½ டன் மக்காச்சோளம், பருத்தி  விதைகள் விற்பனைக்கு தடை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

6½ டன் மக்காச்சோளம், பருத்தி விதைகள் விற்பனைக்கு தடை

தினத்தந்தி
|
4 Aug 2022 12:09 AM IST

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 6½ டன் மக்காச்சோளம், பருத்தி விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள 5 அரசு விதை விற்பனை நிலையங்கள் மற்றும் 29 தனியார் விதை விற்பனை நிலையங்களில் விழுப்புரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் மற்றும் திருச்சி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு ஆகியோர் தலைமையில் விழுப்புரம் மற்றும் திருச்சி மாவட்டங்களின் விதை ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் விற்பனை செய்யப்படும் விதைகளின் தரத்தை ஆய்வு செய்தனர். இதில் விற்பனை உரிமம், விதை இருப்பு, கொள்முதல் செய்த விதைகளின் விவரங்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள், விதைகளின் முளைப்புதிறன், பதிவுசான்றிதழ், விதைகள் சேமிக்கப்படும் விதம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் விதைகளின் தரத்தை உறுதி செய்ய நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களில் 53 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆய்வின்போது விதை சட்ட விதிகளை மீறி பருத்தி, மக்காச்சோள விதைகளை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. மேலும் ரூ.22 லட்சத்து 61 ஆயிரம் மதிப்புள்ள 6½ டன் மக்காச்சோளம், பருத்தி விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்