< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் : தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம்
|24 Nov 2022 4:43 PM IST
கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் விளக்கம் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளார்..
சென்னை,
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்.19ம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் விளக்கம் கேட்டு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளார்..
கவர்னரின் கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது