< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை - கலெக்டர் உத்தரவு
|9 Nov 2022 10:00 PM IST
ஈரோடு மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுபயணத்தின் போது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம், மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நாளை ஒரு நாள் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்காணும் பகுதிகளில் தடைக்கு புறம்பாக டிரோன்கள் பறக்க விடப்பட்டால் சட்ட வீதிகளின்படி காவல்துறையால் கையகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.